விக்ரக ஆராதனை - Idol worship
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ! அன்பு நண்பர்களுக்கு வணக்கம் , விக்ரக ஆராதனை (idol worship) என்பதை பற்றி சற்று நாம் தியானிப்போம் . விக்ரக ஆராதனை என்பது உயிருள்ள கடவுளை ஒரு உயிரற்ற சிலையாகவோ அல்லது உருவமாகவோ செய்து வணங்குவதாகும் . ஒரு கடவுள் உயிரற்ற பொருளாக இருக்க முடியாது . உயிரோடு இருக்கும் மனிதனுக்கு உயிரற்ற பொருள் உதவி செய்ய முடியுமா ? உதாரணமாக , ஒரு மனிதனை நீ ஒரு கல் , நீ ஒரு மண் என்று கூறுவது அவனை அவமானப்படுத்துவது போலாகும் . அனால் நாமோ நமக்கு உடல் தந்து , உயிர்கொடுத்த கடவுளை உயிரற்ற கல் , சிலைகள் , மண்ணுக்கு ...