விக்ரக ஆராதனை - Idol worship
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,
விக்ரக ஆராதனை (idol
worship) என்பதை பற்றி சற்று நாம் தியானிப்போம்.
விக்ரக ஆராதனை என்பது உயிருள்ள கடவுளை ஒரு உயிரற்ற சிலையாகவோ அல்லது உருவமாகவோ செய்து வணங்குவதாகும். ஒரு கடவுள் உயிரற்ற பொருளாக இருக்க முடியாது.
உயிரோடு இருக்கும் மனிதனுக்கு உயிரற்ற பொருள் உதவி செய்ய முடியுமா?
உதாரணமாக, ஒரு மனிதனை நீ ஒரு கல், நீ ஒரு மண் என்று கூறுவது அவனை அவமானப்படுத்துவது போலாகும். அனால் நாமோ நமக்கு உடல் தந்து, உயிர்கொடுத்த கடவுளை உயிரற்ற கல், சிலைகள், மண்ணுக்கு ஒப்பிடுவது அவரை அவமானபடுத்தும் செயல்தானே?
மேலும் நாம் மிருகங்களை தெய்வமாக வணகுகிறோம், இதுவும் கடவுளை அவமானபடுத்தும் செயலே. எப்படியெனில் "உதாரணமாக உங்களையே எடுத்துக்கொள்வோம், உங்களுடைய பெயர் எழுதின ஒரு அட்டையை ஒரு மாட்டின் கழுத்திலோ அல்லது ஒரு யானையின் கழுத்திலோ, கழுதையின் கழுத்திலோ மாட்டிநாளோ, அல்லது அதற்கு உங்கள் பெயரை வைத்து அழைத்தாள் அது உங்களை அவமானப்படுத்தும் செயல் தானே?
இதையே தான் நாம் பக்தி என்ற பெயரில் கடவுளை மிருகங்களோடு ஒப்பிட்டு அவமானபடுத்தி வருகிறோம். இது சரிதானா என்று சிந்தித்து பாருங்கள்" 5 அறிவு மிருகம் கடவுலாகாது, கடவுளுக்கு இறப்பும் கிடையாது. ஆனால் மிருகங்களுக்கு இறப்பு உண்டு.
(Superstitious is a Positive insult of god. We
are worshiping God, even though we are insulting him by
comparing with lifeless objects and 5 sense animals)
நமது நாட்டிலும் கூட இந்த வழிபாட்டு முறை உள்ளது, ஆனாலும் கூட இதை இந்து வேதம் தவறென்று குறிப்பிடுகிறது.
யஜூர் வேதத்திலிருந்து ஒரு உதாரணம் இதோ,
"Manas
aiv edam aptavyam neha nanasti kincana mrtyoh sa mrtyyum gacchati ya iha
naneva"
(Kathopanishad of Krishna yajurveda, II Part, Fourth Chapter,
Eleventh sloka)
இதன் பொருள்,
By mind alone this (God) is to be realised and hence there is no
difference, variousness i.e., in various forms here. From death to death he
goes, who sees as if there is difference or varoiussness here.
ஆதலால் கடவுளை மனதளவில் மட்டுமே உணரமுடியும்.
நமது வேதத்திலும் தேவன் நமக்கு 10 கட்டளையாக
யாத்திராகமம் 20 4-5 இல்
“மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையயோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.
நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்”
தேவன் அருவருக்கும் காரியங்களில் மிக முதன்மையானது உருவ வழிபாடு ஆகும்.
தேவன் சிலைகளில் வசிப்பதில்லை, மாறாக அவர் நமக்குள், நம் நல்ல செயலுக்குள் வாழ்கிறார் என்று வேதம் சொல்லுகிறது,
I கொரிந்தியர் 3:16.
“நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?”
மேலும் கடவுள், ஏழைகளுக்கு உதவுவதிலும், நாம் ஒருவரோடு ஒருவர் அன்புகூருவதிலுமே இருக்கிறர் என்று வேதம் சொல்லுகிறது,
I யோவான் 4: 7-8.
பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.
I யோவான் 4:12
தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
Love and
help others. Lets feel the presence of God!
என்றும் பாசத்துக்குரிய உங்கள் நலன் விரும்பி
பிரவீன் குமார்
(இவை முழுவதும் பரிசுத்த ஆவிஇன் உதவியோடும் உந்துதலோடு எழுதியது)
(பிழைகளுக்கு மன்னிக்கவும்)
Comments
Post a Comment